டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today july 15 2023

கல்வி வளர்ச்சி நாள்!

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

இன்று பள்ளிகள் செயல்படும்!

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கலைஞர் நூலகம் திறப்பு!

இன்று ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர்!

பிரான்சில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

விஜய் பயிலகம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடங்கப்பட உள்ளது.

த.மா.கா. பொதுக்கூட்டம்!

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் இன்று மாலை 5 மணிக்கு த.மா.கா. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நூற்பாலை உரிமையாளர்கள் போராட்டம்!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சிறு குறு நடுத்தர நூற்பாலை உரிமையாளர்கள் இன்று முதல் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்த உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 420வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

யோகி பாபு அடுத்த பட அப்டேட்!

சிம்பு தேகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

சிலப்பதிகாரம் முதல் மாத்திரை சைடு எஃபெக்ட் வரை… டிஐஜி விஜயகுமாரின் செல்போன் சொன்ன தகவல்கள்! 

நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share