கலைஞர் 100 விழா! top ten news in Tamil today January 6 2024
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100 விழா’ சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 6) நடைபெற உள்ளது.
டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர்!
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள உள்ளார்.
அமமுக ஆலோசனைக் கூட்டம்!
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட அமமுக சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற உள்ளது.
இலக்கை அடைகிறது ஆதித்யா எல்1!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து எல்1 புள்ளியில் இன்று மாலை 4 மணிக்கு நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் 57வது பிறந்தநாள் இன்று.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 595வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேப்டன் மில்லர் டிரெய்லர்!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர் சன் டிவி யூடியூப் பக்கத்தில் இன்று வெளியாகிறது.
ப்ளூ ஸ்டார் ரிலீஸ் தேதி!
பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Blue Star’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணி வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மின்ட் – ஜிஞ்சர் டிரிங்க்!
தங்கம் தென்னரசு டிக் ஷனரி: அப்டேட் குமாரு
top ten news in Tamil today January 6 2024