டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today january 21 2024

திமுக இளைஞரணி மாநாடு! top ten news in Tamil today January 21 2024

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு இன்று (ஜனவரி 21) நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தனுஷ்கோடியில் பிரதமர் மோடி!

மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

ADVERTISEMENT

ஜிப்மர் விடுமுறை வழக்கு!

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு மதியம் 2.30 மணி வரை விடுமுறை அறிவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

ADVERTISEMENT

அதிமுக பொதுக்கூட்டம்!

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை திலகர் திடலில் இன்று நடைபெற உள்ளது.

பொது விடுமுறைக்கு எதிரான வழக்கு!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்த மகாராஷ்டிரா அரசின் உத்தரவை எதிர்த்து மாணவர்கள் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை மும்பை நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

சபரிமலை நடை அடைப்பு!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு பெற்றதையடுத்து இன்று முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

புத்தக கண்காட்சி நிறைவு!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 610வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சந்தானம் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: தினமும் சூப் குடிப்பது நல்லதா, கெட்டதா?

கோயிலா? மருத்துவமனையா?: அப்டேட் குமாரு

top ten news in Tamil today January 21 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share