டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today january 12 2024

கடல் மேம்பாலம் திறப்பு! top ten news in Tamil today January 12 2024

மும்பையில் 21.8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக நீண்ட கடல் மேம்பாலமான ‘அடல் சேது’வை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 12) திறந்து வைக்க உள்ளார்.

அமைச்சர் பொன்முடி வழக்கு!

சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் தீர்ப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்!

நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீவுத்திடலில் பொருட்காட்சி!

சென்னை தீவுத்திடலில் இன்று முதல் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இந்த பொருட்காட்சியை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 601வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் படங்கள் ரிலீஸ்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ’கேப்டன் மில்லர்’, ’அயலான்’, ’மெரி கிறிஸ்துமஸ்’, ’மிஷன் சேப்டர் 1 – அச்சம் என்பது இல்லையே’ ஆகிய 4 தமிழ்படங்கள் இன்று வெளியாக உள்ளது.

’ரகு தாத்தா’ டீசர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: அழகு சிகிச்சையில் டிரெண்டாகும் ‘ஐவி தெரபி’ எல்லாருக்கும் ஏற்றதா?

கிச்சன் கீர்த்தனா: ஈஸி சிக்கன் பிரியாணி!

top ten news in Tamil today January 12 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share