மோடி நீலகிரி பயணம்!
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 9) ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் – பெள்ளி தம்பதியை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று சந்திக்க உள்ளார்.
உக்ரைன் அமைச்சர் இந்தியா சுற்றுப்பயணம்!
உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் தபரோவா 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
பாஜக வேட்பாளர் பட்டியல்!
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
ட்விட்டர் ஸ்பேஸில் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மாலை 6 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றுகிறார்.
ஈஸ்டர் திருநாள்!
கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தேரோட்டம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 323வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் தமிழக மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஐபிஎல் டிக்கெட் விற்பனை!
ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
ஐபிஎல் 2023!
ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் இன்று குஜராத் – கொல்கத்தா மற்றும் மற்றொரு லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.