டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

By Kavi

|

Published on 5 Sep 2023, 6:18 AM

Top Ten News in Tamil September 5 2023

7 இடங்களில் இடைத்தேர்தல்!

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 5) தேர்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணி கூட்டம்!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரையொட்டி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ஆசிரியர் தினம்!

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை நல்லாசிரியர் விருது வழங்குகிறது.

ADVERTISEMENT

ஆசிரியர்களின் ரத யாத்திரை!

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரியில் இருந்து டெல்லி வரை இன்று ரத யாத்திரையை தொடங்குகிறது.

வ.உ.சி.க்கு மரியாதை!

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, வ.உ.சி-யின் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

பட்டமளிப்பு விழா!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 43ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

சோனியா காந்தி ஆலோசனை!

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார்.

மழை அப்டேட்!

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை இந்திய அணி!

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்று இலங்கையின் கண்டியில் பிசிசிஐ அறிவிக்கவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் தொடர்ந்து 472ஆவது நாளாக  விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மராத்தா இட ஒதுக்கீடு… போராட்டத்தில் வெடித்த கலவரம்: மன்னிப்பு கேட்ட துணை முதல்வர்

டிஜிட்டல் திண்ணை:  உதயநிதிக்கு நன்றி சொல்லும் பாஜக… வடக்கில் இருந்து வந்த ரிப்போர்ட்- ஸ்டாலின் டென்ஷன்!

குஷ்பு கோவில்ல ஒரு அர்ச்சனை: அப்டேட் குமாரு

யாரையும் புண்படுத்தக் கூடாது : உதயநிதி பேச்சு குறித்து மம்தா

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel