டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news in tamil september 1

இந்தியா கூட்டணி கூட்டம்!

மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் இரண்டாவது நாள் கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 1) இலட்சினை வெளியிடப்படுகிறது.

ADVERTISEMENT

காவிரி நீர் வழக்கு!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ADVERTISEMENT

ஆதித்யா எல் 1 கவுண்டவுன்!

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவ உள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.

ADVERTISEMENT

கிக் திரைப்படம் ரிலீஸ்!

நவீன் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்த கிக் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சிங்கப்பூர் தேர்தல்!

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

மார்க் ஆண்டனி டிரைலர் அப்டேட்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகிறது.

பி.எட் கல்லூரி விண்ணப்பம்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 468-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மோதல்!

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் முட்டை வறுவல்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share