டாப் 10 செய்திகள் : தேவர் ஜெயந்தி முதல் அரை நாள் விடுமுறை வரை!

Published On:

| By Kavi

அரை நாள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின்

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 30) பசும்பொன்னில் உள்ள, முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபோற்சவ நிகழ்வு!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குகளுடன் இன்று 8ஆம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வு  நடைபெறவுள்ளது. இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தீபோற்சவ நிகழ்வாகும்.

ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்!

சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.  நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு இணைய சேவை பாதிக்கப்பட்டது. பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். நள்ளிரவிலும் பேருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

மழை அப்டேட்!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உலக சிக்கன நாள்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாக செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 227-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு ரயில்கள்!
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக இன்று தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மானாமதுரைக்கு செல்லும் சிறப்பு ரயில் மாலை 5 மணிக்கும், நாகர்கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் மதியம் 3.45 மணிக்கும் புறப்படும்.

ஐடிஐ மாணவர் சேர்க்கை!
ஐடிஐ-களில் மாணவர் சோ்க்கைக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஷாஹி ரசமலாய்!

தீபாவளி அன்று கனமழையா?

வாக்காளர் அட்டையை திருத்துவது எப்படி?

யார் இந்த அமரன் முகுந்த் வரதராஜன்? இறப்பில் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காத மனைவி!

திருப்பூர்: பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு… போராட்டம் நடத்திய விசிக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share