டாப் 10 நியூஸ்: திமுக எம்.பி-க்கள் கூட்டம் முதல் இந்தியா – நியூசிலாந்து இறுதிப் போட்டி வரை!

Published On:

| By Selvam

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 9) திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

எடப்பாடி கலந்தாய்வு கூட்டம்!

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு கூட்டம் நடத்துகிறார். Top ten news in Tamil

மின்சார ரயில் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையானது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தில் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி!

துபாயில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா!

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தெப்போற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் இன்று முதல் மார்ச் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடற்கரைகளில் இறுதிப்போட்டி!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரடியாக கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share