சிஐஎஸ்எஃப் தின நிகழ்ச்சி!
மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் கடல்வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மார்ச் 7) தொடங்கி வைக்கிறார். Top ten news tamil
ராகுல் குஜராத் பயணம்!
குஜராத் மாநிலத்தில் வருகிற 2027-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அம்மாநில காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை செய்கிறார்.
இஃப்தார் நோன்பு திறப்பு!
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தவெக சார்பில் இன்று நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார்.
அன்பழகன் நினைவு தினம்!
மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அக்கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்படுகிறது.
‘குடும்பஸ்தன்’ ஓடிடி ரிலீஸ்!
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
இந்த வார தியேட்டர் ரிலீஸ்!
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கிஸ்டன்’, ஷாம் நடித்துள்ள ‘ஆஸ்த்ரம்’, பாரதிராஜா நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில்’, லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ‘ஜென்டில்வுமன்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
நீட் தேர்வு விண்ணப்பம்!
2025 – 2026-ஆம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
‘பைசன்’ ஃபர்ஸ்ட் லுக்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Top ten news tamil