மோடி உத்தரகாண்ட் பயணம்!
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று (மார்ச் 6) பயணம் செல்லும் பிரதமர் மோடி, முக்வாவில் உள்ள கங்காதேவி கோவிலில் வழிபாடு செய்கிறார். பின்னர் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார். Top ten news Tamil
அமித்ஷா தமிழகம் வருகை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு அமித்ஷா நாளை வருகை தருவதை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி திருவாரூர் பயணம்!
திருவாரூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 5) இரவு திருவாரூர் சென்றார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்தரங்கம்!
சென்னை ஒய்எம்சிஏ அரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘நாடாளுமன்ற ஜனநாயகமும் கம்யூனிஸ்ட்களும்’ என்ற தலைப்பில் இன்று நடைபெறும் கருத்தரங்கில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம்!
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மின்சார ரயில்கள் ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்றும் நாளையும் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 பூஜை!
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் தொடக்க பூஜை சென்னையில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.