மோடி இன்றைய நிகழ்ச்சிகள்!
மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச் 30) மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஹெக்டேவார், கோல்வால்கர் நினைவிடங்களில் மோடி இன்று மரியாதை செலுத்துகிறார். top ten news in tamil
நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை!
திருச்சியில் இன்று நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
திமுக மாணவரணி கூட்டம்!
திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் உதகையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தலைமையில் இன்று நடைபெறுகிறது.
யுகாதி பண்டிகை!
தெலுங்கு மற்றும் கன்னட வருட பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய ஐபிஎல் போட்டிகள்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி – ஹைதராபாத், ராஜஸ்தான் – சென்னை அணிகள் மோதுகின்றன.
பிரேசில் – இந்தியா மோதல்!
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் கால்பந்து போட்டியில், பிரேசில் லெஜண்ட்ஸ் – இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் மோதுகின்றன.
‘குட் பேட் அக்லி’ இரண்டாவது பாடல்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை!
திருச்சியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது. top ten news in tamil
