டாப் 10 நியூஸ்: தவெக பொதுக்குழு கூட்டம் முதல் சிஎஸ்கே – பெங்களூரு மேட்ச் வரை!

Published On:

| By Selvam

தவெக பொதுக்குழு கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. top ten news tamil

வனத்துறை மானியக்கோரிக்கை!

சட்டமன்றத்தில் இன்று கதர், கிராமத்தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் வனத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது.

சந்திரபாபு நாயுடு சென்னை வருகை!

சென்னை ஐஐடியில் நடைபெறும் அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார்.

மா.சுப்பிரமணியன் வழக்கில் தீர்ப்பு!

தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளிக்கிறார்.

சென்னை – பெங்களூரு மோதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில் இயக்கம்!

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உதகை – குன்னூர் மற்றும் உதகை – கேத்தி இடையே இன்று முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ்!

சப்தம், அகத்தியா, ஓம் காளி ஜெய் காளி, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், செருப்புகள் ஜாக்கிரதை, முஃபாசா தி லயன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகின்றன.

‘ஒன்ஸ் மோர்’ பாடல் ரிலீஸ்!

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ‘எதிரா? புதிரா?’ பாடல் இன்று வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share