வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா!
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 27) தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகிறார். top ten news in tamil
விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை!
சட்டமன்றத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
அண்ணாமலை டெல்லி பயணம்!
பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (மார்ச் 25) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
வேங்கைவயல் வழக்கு!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்!
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களில் உள்ள எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராம் சரண் புதிய படம்!
புச்சி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ராம் சரண் நடிக்கும் ‘RC 16’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
ஹைதராபாத் – லக்னோ மோதல்!
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
‘எல் 2 எம்புரான்’ ரிலீஸ்!
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘எல் 2 எம்புரான்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. top ten news in tamil