இஃப்தார் நோன்பு!
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (மார்ச் 25) நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னை எழும்பூர் ஃபைஸ் மாலில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. Top ten news in tamil
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை!
சட்டமன்றத்தில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த துறையின் மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
டாஸ்மாக் வழக்கு விசாரணை!
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!
ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
திமுக இளைஞரணி கண்டன பொதுக்கூட்டம்!
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி மொழி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஐபிஎல் டிக்கெட் விற்பனை!
மார்ச் 28-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே, பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
‘டெஸ்ட்’ டிரைலர் ரிலீஸ்!
சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
குஜராத் – பஞ்சாப் மோதல்!
குஜராத் நரேந்திர மோதி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Top ten news in tamil