டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Kavi

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

இன்று (மார்ச் 19) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு பிறகு, அக்கட்சி மக்களவைத் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.

சிஏஏவுக்கு எதிரான வழக்கு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

பாஜக பொதுக்கூட்டம்!

சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

பாஜக – பாமக கூட்டணி அறிவிப்பு!

பாஜகவுடனான கூட்டணி தொடர்பாகவும், தொகுதி எண்ணிக்கை தொடர்பாகவும் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

தேமுதிக விருப்ப மனு!

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனு பெறப்படவுள்ளது.

ஆளுநருக்கு எதிரான மனு விசாரணை!

முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

டிஜிட்டல் விவசாயத்திற்கான கூட்டம்!

டிஜிட்டல் விவசாயத்திற்கான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பொருட்களின் இணையம் குறித்த குழுவின் 9 வது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

வறண்ட வானிலை!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 6வது நாளாக விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.75 க்கும், டீசல் ரூபாய் 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சூர்யா பட டீஸர்!

நடிகர் சூர்யாவின் கங்குவா பட டீஸர் இன்று மாலை வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: ஒரே இரவில் மாற்றம்… மோடியுடன் மேடையேறும் ராமதாஸ், அன்புமணி-தைலாபுரத்தில் நடந்தது என்ன?

இனி விளையாடிக் கொண்டே வேலை தேடலாம்!

சங்கரராமன் கொலை வழக்கு: நீதிபதியின் பணி நீக்கத்தை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

விபத்தில் சிக்கிய ‘சைத்தான்’ நடிகை… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share