டிரம்ப் – புதின் ஆலோசனை!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இன்று (மார்ச் 18) ஆலோசனை நடத்துகிறார். Top ten news tamil
சுனிதா வில்லியம்ஸ் ரிட்டர்ன்ஸ்!
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் டிராகன் விண்கலத்தின் மூலம் இன்று இந்திய நேரப்படி மாலை 5.57 மணிக்கு பூமிக்கு திரும்புகின்றனர்.
பட்ஜெட் மீது விவாதம்!
சட்டமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற உள்ளது.
அனைத்து கட்சி கூட்டம்!
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
திமுக இளைஞரணி கண்டன பொதுக்கூட்டம்!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் இன்று கோவை, மதுரை, ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பதி தரிசன டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.
‘குட் பேட் அக்லி’ முதல் சிங்கிள்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் ‘ஓஜி சம்பவம்’ முதல் பாடல் இன்று வெளியாகிறது.
‘சிக்கந்தர்’ பாடல் ரிலீஸ்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.