ரெய்சினா மாநாடு!
டெல்லியில் இன்று (மார்ச் 17) நடைபெற உள்ள சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ரெய்சினா மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். top ten news tamil
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!
சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. வாக்கெடுப்பு நடக்கும்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்.
மீண்டும் கூடும் நாடாளுமன்றம்!
மார்ச் 13,14,15,16 ஆகிய நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் இன்று மீண்டும் தொடங்குகிறது.
பாஜக முற்றுகை போராட்டம்!
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.
உச்சநீதிமன்ற புதிய நீதிபதி பதவியேற்பு!
மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாய்மால்யா பாக்சி உச்சநீதிமன்ற புதிய நீதிபதியாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாடு மே 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக விவாதிப்பதற்காக திண்டிவனம் கே.ஆர்.எஸ் அம்மா மஹால் அரங்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
விஜய் சேதுபதி படம் அப்டேட்!
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘Ace’ படத்தின் ‘உருகுது உருகுது’ பாடல் இன்று வெளியாகிறது.
கூடுதல் டோக்கன்கள் விநியோகம்!
பங்குனி மாதத்தின் மங்களகரமான நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.