திமுக ஐடி விங் கூட்டம்!
சமூக வலைதளங்களில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை ஒருங்கிணைக்கும் ‘DMK Volunteer’s Meet 2025’ நிகழ்ச்சி திமுக ஐடி விங் மாநில செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா தலைமையில் சென்னையில் இன்று (மார்ச் 16) நடைபெறுகிறது. top ten news tamil
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா இன்று நடைபெறுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.
நாம் தமிழர் பேரணி!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பஞ்சமர் நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகில் பேரணி நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்தரங்கம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டை ஒட்டி கோவையில் இன்று ‘மோடி இந்தியா Vs கம்யூனிஸ்களின் இந்தியா’, ‘தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்’ என்ற தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. கேரள மாநில கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கருத்தரங்கில் உரையாற்றுகின்றனர்.
தவெக ஆர்ப்பாட்டம்!
சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ரயில் சேவை ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மோதல்!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
முதுநிலை மருத்துவ படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து இன்று சமூக சமத்துவத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.