தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!
2025 -26-ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். top ten news in tamil
கனடா பிரதமர் பதவியேற்பு!
மத்திய வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார்.
திமுக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 8.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் நடைபெற உள்ளது.
ஹோலி பண்டிகை!
வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா!
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
சபரிமலை நடை திறப்பு!
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
ஹால் டிக்கெட் வெளியீடு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. இன்று பிற்பகல் முதல் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வார ரிலீஸ்!
ராபர், பெருசு, ஸ்வீட் ஹார்ட், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், வருணன், மாடன் கொடை விழா, டெக்ஸ்டர், குற்றம் குறை ஆகிய புதிய படங்கள் இன்று ரிலீஸ் செய்யப்படுகின்றன. சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரவி மோகன் நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்படுகின்றன. top ten news in tamil