டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Minnambalam

தமிழ்நாடு வேளாண்மை கொள்கை!

உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு வேளாண்மை கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 14) வெளியிடுகிறார்.

ADVERTISEMENT

அதிமுக ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

பிளஸ் 1 பொதுத்தேர்வு!

தமிழகம், புதுச்சேரியில் இன்று 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 7,88,064 மாணவர்கள் எழுதுகின்றனர்.

ADVERTISEMENT

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

NLC நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து‌ இன்று கடலூர் சேத்தியாத்தோப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.

அத்தனபேர் மத்தியில பாடல்!

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடித்த ராவண கோட்டம் படத்தின் அத்தனபேர் மத்தியில பாடல் இன்று வெளியாகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட்!

பெண்கள் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 296-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெரம்பலூர் சிறுவன் கொலை: கஞ்சா போதை காரணமா?

பிளஸ் டூ தேர்வு: இத்தனை பேர் எழுதவில்லையா?

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share