டாப் 10 நியூஸ்: திமுக இளைஞரணி கண்டன பொதுக்கூட்டம் முதல் மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் விஜய் வரை!

Published On:

| By Selvam

நாடாளுமன்றம் விடுமுறை!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் நாளையும் (மார்ச் 13,14) செயல்படாது என்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. top ten news in tamil

திமுக இளைஞரணி கண்டன பொதுக்கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இன்று முதல் சட்டமன்ற வாரியாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்தவகையில் முதற்கட்டமாக இன்று பாலக்கோடு, தஞ்சாவூர், பெரம்பலூர், ஸ்ரீவில்லிபுத்தூர், காட்பாடி, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை இன்று சந்தித்து, இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மேல்பாலூர் கிராம ஊராட்சியில் பசுமை தாயகம் சார்பில் நடைபெறும் 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை பசுமை தாயகம் தலைவர் செளமியா அன்புமணி இன்று தொடங்கி வைக்கிறார்.

மகளிர் தின கொண்டாட்டம்!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சையத் ஹசினா தலைமையில் இன்று மகளிர் தின நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வழிபாடு!

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வழிபாடு இன்று நடைபெறுகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பெளர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

க்யூட் நுழைவு தேர்வு!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவு தேர்வு இன்று முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share