மோடி மொரிஷியஸ் விசிட்!
அரசு முறை பயணமாக இன்றும் நாளையும் (மார்ச் 11,12) மொரிஷியஸ் நாட்டிற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். Top ten news in tamil
நலத்திட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின்!
செங்கல்பட்டு மாவட்டம் அரசினர் தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் ரூ.508 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை 50,606 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
திமுக எம்.பி-க்களை அநாகரீகமானவர்கள் என்று விமர்சித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னை எம்.கே.பி நகர் பேருந்து நிலையம் அருகில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தவெக போராட்டம்!
மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தவெக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
நான் முதல்வன் சேர்க்கை முகாம்!
நான் முதல்வன், பிஎம் வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று தொடங்குகிறது.
கோடநாடு வழக்கு!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் விசாரணைக்கு இன்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம்!
நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நேற்று (மார்ச் 10) தொடங்கிய நிலையில், இன்று திருத்தங்கள் செய்ய கடைசி நாளாகும்.
கனடா, நெதர்லாந்து மோதல்!
நமீபியா வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கனடா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
