நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 10) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் போலி வாக்காளர்கள், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். Top ten news in tamil
ஸ்டாலின் செங்கல்பட்டு பயணம்!
இன்றும் நாளையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பாமக பொது நிழல் நிதிநிலை!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று வெளியிடுகிறார்.
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர்!
புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் கைலாஷநாதன் உரையுடன் இன்று தொடங்குகிறது. மார்ச் 12-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாராண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் ஆலோசனை!
கோவை கருமத்தம்பட்டியில் இன்று நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில் பொன்னேரி – கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா சாம்பியன்!
துபாயில் நேற்று (மார்ச் 9) நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.