டாப் 10 செய்திகள் : ஆம்ஸ்ட்ராங் கொலையில் 8 பேர் சரண் முதல் திமுக உண்ணாவிரத போராட்டம் வரை!

Published On:

| By Kavi

திமுக உண்ணாவிரத போராட்டம்!

பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில், இன்று (ஜூலை 6) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

பாஜக செயற்குழு கூட்டம்!

தமிழக பாஜக செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடசாலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி ஆற்காடு பாலு  உட்பட 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

ஆந்திரா தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு!

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் இடையே நிலுவையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக தீர்வு காண்பதற்கு இரு மாநில முதல்வர்கள் இன்று (ஜூலை 6) ஹைதராபாத்தில் சந்திக்க உள்ளனர்.

டி20 தொடரின் முதல் ஆட்டம்!

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று நடைபெற உள்ளது.

6 நாட்களுக்கு மழை!
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 10ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாயாவதி வருகை!
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் இன்று சென்னை வருகிறார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 111வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை திறக்கப்படுமா?
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை திறக்கப்படுமா என்பது குறித்து அம்மாநில அரசு நியமித்த புதிய குழு இன்று முடிவு செய்யவுள்ளது.

விக்கிரவாண்டிக்கு விடுமுறை!
இடைத்தேர்தலை சந்திக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் 10ஆம் தேதியன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ரஷ்யன் சாலட்!

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி… இடதுசாரிகளின் எதிர்காலம் என்ன? யார் இந்த கியர் ஸ்டாமர்?

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடா? – எடப்பாடிக்கு சக்கரபாணி பதில்!

நிலக்கரித்துறை 10.2% சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

ஹத்ராஸ் சம்பவம் : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக ராகுல் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share