டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news in tamil july 23 2023

திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மகளிரணி சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் இன்று (ஜூலை 23) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

பாஜக ஆர்ப்பாட்டம்!

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

ADVERTISEMENT

மாஞ்சோலை நினைவு நாள்!

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு நாளை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் தாமிரபரணி ஆற்றில் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.

ADVERTISEMENT

மேல்நிலை எழுத்தர் தேர்வு!

புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.

ட்ரோன்கள் பறக்க தடை!

மாமல்லபுரத்தில் ஜூலை 24 முதல் ஜி20 கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து, ஆஸ்திரியா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 427-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சேரன் சினிமா பயணம்!

இயக்குநர் சேரன் 25 ஆண்டு கால சினிமா பங்களிப்பை கொண்டாடும் வகையில் காரைக்குடியில் இன்று கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தாமதமாக புறப்படும் தேஜஸ் ரயில்!

மதுரையில் இருந்து எழும்பூர் வரும் தேஜஸ் ரயில் மதியம் 3 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரூ.7,000-க்கு ஏலம் விடப்பட்ட ஒரு வடை!

“ஸ்டாலினிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share