ADVERTISEMENT

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

சத்தீஸ்கர் மாநிலத்தில் மோடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.7500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று (ஜூலை 7) துவக்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

ராகுல் வழக்கில் தீர்ப்பு!

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

ADVERTISEMENT

ஆளுநர் டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் செய்கிறார்.

ADVERTISEMENT

34 ஜோடிகள் திருமணம்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 34 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைக்கிறார்.

மகளிர் உரிமை திட்டம்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பம்பர் திரைப்படம் ரிலீஸ்!

செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பம்பர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கன மழை விடுமுறை!

கன மழை காரணமாக புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது‌.

கோவை, திண்டுக்கல் அணிகள் மோதல்!

இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 412-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: தேர்தல் வழக்கில் வென்றது எப்படி? விளக்குகிறார் வழக்கறிஞர் வி.அருண்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share