டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

Top ten news in tamil

ஜெயலலிதா பிறந்தநாள்

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று.

தமிழைத் தேடி விழிப்புணர்வு

தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சிதம்பரம் செல்கிறார்.

முதல்வர் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்யவிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு நாளை பிரச்சாரம் செய்யவுள்ளார்.

டேக்வாண்டோ சாம்பியன் போட்டி

டெல்லியில் 3 நாட்கள் நடைபெறவுள்ள அகில இந்திய டேக்வாண்டோ சாம்பியன் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைக்கிறார்.

திருப்பதி தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாத தரிசனத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் இன்று 279வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் மின் தடை

சென்னையில் இன்று கிண்டி, போரூர், அம்பத்தூர், கே.கே. நகர் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இயல்பை விட வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் சென்னை எஃப்சி அணிகள் இன்று மோதுகின்றன.

திரையரங்கில் வெளியாகும் படங்கள்

பாபி சிம்ஹா நடித்துள்ள ’தக்ஸ்’, மிர்ச்சி சிவாவின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’, ‘குற்றம் புரிந்தால்’ மற்றும் ‘வெள்ளிமலை’ படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபுள் சீக் கபாப்!

“ரோஹிணி ஐ.ஏ.எஸ் பற்றி பேசக்கூடாது”: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share