தியாகிகள் மணிமண்டபம்!
பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட மதுரை மாவட்டம் பெருங்காநல்லூர் தியாகிகள் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 14) காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
திரிபுரா பிரச்சாரம் நிறைவு!
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்!
புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
விசிக ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் விசிக மாநில இளைஞர் அணி செயலாளர் சங்க தமிழன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 269-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று ஹைதரபாத், ஏடிகே மோகன் பகன் அணிகள் மோதுகின்றன.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காதலர் தினம்!
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
கடலூர் மின்வெட்டு!
கடலூர் மாவட்டத்தில் இன்று கேப்பர் ஹில்ஸ், வண்டிப்பாளையம், திருப்பாதிரிபுலியூர், பாதிரிகுப்பம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.