ஈரோட்டில் ஸ்டாலின் Top Ten News 20 December 2024
கள ஆய்வு மேற்கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஈரோடு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில், பங்கேற்கிறார். அங்கு, ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
எந்தெந்த படங்கள் ரிலீஸ்?
இன்று, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விடுதலை 2, உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்கோ, முபாசா : தி லயன் கிங், ரைபிள் கிளப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
சென்னையில் உணவு திருவிழா!
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, இன்று தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நாடாளுமன்றம் கடைசி நாள்!
கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று நிறைவு பெறுகிறது. இதற்கிடையே அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே மோதல் போக்கு உண்டானது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு!
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மழை & பனிமூட்டம்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சிறப்பு பேருந்துகள்!
வார விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் இன்று முதல் 25ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சர்வதேச மனித ஒற்றுமை தினம்!
உலகில் வேற்றுமை நீங்கி ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20ஆம் தேதி சர்வதேச மனித ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.
அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நேற்று திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் இன்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றியத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.90ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.49-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவில் பத்து பைசா கூட கொடுக்காமல் ரயிலில் போகலாம்? எங்கே?
ஆற்றில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: பாலம் அமைக்க வலியுறுத்தல்!
ஹெல்த் டிப்ஸ்: பசி உணர்வு இல்லையா… அலட்சியப்படுத்தாதீர்கள்!
பியூட்டி டிப்ஸ்: தலைக்கு மருதாணி… எப்படி உபயோகிப்பது?
.