டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

மத்திய பட்ஜெட் தாக்கல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கள ஆய்வில் முதல்வர் திட்டம்!

கள ஆய்வில் முதல்வர் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் பயணம் செய்கிறார்.

அதிமுக தேர்தல் பணிமனை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் இன்று தேர்தல் பணிமனை திறக்கப்பட உள்ளது.

பாஜக ஆதரவு அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை இன்று அறிவிக்கிறார்.

தளபதி 67 அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகிறது.

தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியியல், இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

வானிலை நிலவரம்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடப்பதை ஒட்டி நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து மோதல்!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 256-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக மேல்மருவத்தூர் – விழுப்புரம் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.

வேலுமணி வழக்கில் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்

திருமண நாள்: விஜயகாந்த்தை நேரில் வாழ்த்திய எஸ்.ஏ.சி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share