குடியரசு தலைவர் நிகழ்ச்சி!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 8) ஆரோவில்லில் ஸ்ரீ அரவிந்தோ ஆசிரம நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்!
மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி பேசுகிறார்.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை!
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை இன்று முதல் விசாரணை மேற்கொள்கிறது.
கோவை குற்றாலம் திறப்பு!
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று திறக்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் இசை!
பொன்னியின் செல்வன் 2 படத்தின் பின்னணி இசை இன்று வெளியாகிறது.
அண்ணாமலை நடைபயணம்!
பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை இன்று 12 வது நாள் என் மண் என் மக்கள் நடைபயணம் திருப்பரங்குன்றத்திலிருந்து திருமங்கலம் வரை மேற்கொள்கிறார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதல்!
இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
குஷி ட்ரெய்லர் ரிலீஸ்!
ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த குஷி படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 442 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று இயல்பை விட 38 – 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வியில் பொதுப் பாடத்திட்டம்: அகமும் புறமும்!
ED விசாரணையில் செந்தில் பாலாஜி : அடுத்த கைது யார்?
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவு: ஸ்டாலின் வருத்தம்!