கலைஞர் நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை இன்று (ஆகஸ்ட் 7) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது.
குடியரசு தலைவர் புதுச்சேரி பயணம்!
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று புதுச்சேரி செல்கிறார்.
மருத்துவ படிப்பு கலந்தாய்வு!
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று (ஆகஸ்ட் 7) துவங்குகிறது.
மணிப்பூர் டிஜிபி ஆஜர்!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
நான் முதல்வன் திட்டம்!
நான் முதல்வன் திட்டத்தின் முதலாமாண்டு வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று 11-ஆவது நாளாக மதுரை மேற்கு தொகுதியில் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 442-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா, கொரியா மோதல்!
ஆசிய ஹாக்கி கோப்பை போட்டியில் இன்று இந்தியா, கொரியா அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று இயல்பை விட 38-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆடிக்கிருத்திகை சிறப்பு பேருந்துகள்!
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
WI vs IND: சொதப்பிய இந்திய அணி: வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!
”அதிமுக வாக்கு சதவிகிதம் இதுதான், ஈபிஎஸை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” : டிடிவி சூளுரை!