டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news september 4

பாட்காஸ்டில் ஸ்டாலின்

’ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் பாட்காஸ்ட் ஒளிபரப்பு இன்று முதல் துவங்க உள்ளது.

ADVERTISEMENT

புதுமைப்பெண் திட்டம் விண்ணப்பிக்கலாம்!

2023-24ஆம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தளமானது இன்று தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவிகள் அனைவரும் தாங்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மங்கோலியாவில் போப்

மங்கோலியா நாட்டுக்கு திருத்தூது பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் இன்று அந்நாட்டில்  தொண்டுப்பணிகள் ஆற்றும் பணியாளர்களைச் சந்தித்து தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

ADVERTISEMENT

மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இன்று (செப்டம்பர் 4) பிற்பகல் வெளியிடப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்தியா – நேபாளம் மோதல்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5வதுலீக் ஆட்டத்தில் இன்று பலம்வாய்ந்த இந்திய அணியுடன், நேபாள அணி பல்லகெலே மைதானத்தில் மோதவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும்.

வெற்றிமாறன் பிறந்தநாள்!

தமிழ் திரையுலகின் வெற்றிகரமான இயக்குனரான வெற்றிமாறன் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் தொடர்ந்து 471-வது நாளாக  விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குடமுழுக்கு விழா!

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

வேலூரில் கூடைப்பந்து போட்டி!

வேலூர் தந்தை பெரியார் பூங்காவில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கேலோ இந்தியா கூடைப்பந்து லீக் போட்டிகள் இன்று தொடங்கி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

கிச்சன் கீர்த்தனா: லீன் அன்ட் லைட் சாலட்  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share