டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news october 25 2023

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (அக்டோபர் 25)ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ADVERTISEMENT

40 கூடுதல் ரயில்கள் இயக்கம்!

டெல்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க இன்று (அக்டோபர் 25) முதல் 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

ஹாமூன் புயல் கரையை கடக்கிறது!

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஹாமூன் புயல் இன்று கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ADVERTISEMENT

தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை!

ஆயிரத்து 38 ஆம் ஆண்டு சதய விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் 200வது நாள்!

முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் என்ற பெருமை பெற்ற ’சென்னை – கோவை வந்தே பாரத்’ இன்றுடன் 200வது நாட்களை நிறைவு செய்கிறது.

இன்று வரை சிறப்பு பேருந்துகள்!

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுரை மணி ஐயர் பிறந்த நாள்!

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மிகவும் பிரபலமான கர்நாடக சங்கீத பாடகர்களில் ஒருவராக மனதை ஈர்க்கும் குரல் வளம் கொண்ட மதுரை மணி ஐயர் பிறந்த நாள் இன்று.

ஆஸ்திரேலியா-நெதர்லாந்து மோதல்!

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 522வது நாளாக விலையில் மாற்றமின்றி  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: முளைக்கட்டிய பயறு அடை

ஏன் வழங்க வேண்டும் பெண்களுக்கு உரிமைத் தொகை?

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share