காலத்தின் மாற்றம் மற்றும் தேவையின் காரணமாக இன்று பல துறைகளிலும் பெண்கள் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகளின் தொடர் முயற்சியால் கல்வி வேலை வாய்ப்பு, உள்ளிட்ட அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 2023-24 நிதி ஆண்டில் 40.3% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் வீல்பாக்ஸ் என்ற அமைப்பு உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான நடப்பு ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுளளது. இதில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கேரளாவும், மூன்றாவது இடத்தில் குஜராத்தும் உள்ளன. இந்த பட்டியலில் 4 ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் , கர்நாடகா, மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்கள் உள்ளன.
