டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news September 9 2023

குறுவை சாகுபடி பாதிப்பு: முதல்வர் ஆலோசனை!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) ஆலோசனை நடத்துகிறார்

நிலவுக்கு செல்லும் ஜப்பான் விண்கலம்!

இந்தியாவை தொடர்ந்து நிலவுக்கு SLIM விண்கலத்தை வெற்றிகரமாக  இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணிக்கு அனுப்பியது ஜப்பான்.

டெல்லியில் ஜோ பைடன்!

இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வருகிறார்.

சிபிஐஎம் போராட்டம்!

விலைவாசி உயர்வு,  வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ரயில் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

பாமக எம்.எல்.ஏ வழக்கு!

பா.ம.க எம்.எல்.ஏ குடும்ப பிரச்னை குறித்து விசாரித்த மகளிர் போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.

வேளாங்கண்ணி பெரிய தேர்பவனி!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று இரவு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.

ஒடிடியில் ஜெயிலர்!

நடிகர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் பிரபல ஒடிடி தளமான அமேசானில் இன்று வெளியாகிறது.

ஒரே நாளில் 4 திரைப்படங்கள்!

ஷாருக்கானின் ஜவான், சேரனின் தமிழ் குடிமகன், ஹாலிவுட்டின் தி நன் 2 மற்றும் அனுஸ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய 4 திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

வங்கிகளுக்கு விடுமுறை!

ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குஜராத், மத்தியப் பிரதேசம், சண்டிகர், சிக்கிம், ராஜஸ்தான், ஜம்மு, பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வங்கிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று 474வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

வேலைவாய்ப்பு : கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணி!

அயோத்தி சாமியார், அமித் மாள்வியா மீது வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share