டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

காஞ்சிபுரத்தில் பன்னீர்!

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த கலியனூர் பகுதியில் இன்று (செப்டம்பர் 3) நடைபெற உள்ளது.

அமித் ஷா – ஆளுநர்  சந்திப்பு!

டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை!

உலகக்கோப்பை தொடரில் ஆமதாபாத்தில் அக்டோபர் 14-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் இன்று ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனையாகிறது.

சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு!

விண்ணில் வெற்றிகரமாக நேற்று ஏவப்பட்ட “ஆதித்யா-எல்1 விண்கலத்தின் புவியின் முதல் கட்ட சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி இன்று காலை 11:45 மணி நேரத்தில் நடத்த இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல் மழை!

வட மாவட்டங்கள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இன்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று 470ஆவது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சாக்‌ஷி மாலிக் பிறந்தநாள்!

இந்தியாவுக்காக ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களையும், இளம் வயதில் பத்மஸ்ரீ, தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளை வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் பிறந்தநாள் இன்று.

’இறைவன்’ படத்தின் டிரெய்லர்

வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள  ‘இறைவன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

‘மார்க் ஆண்டனி’ டிரெய்லர் வெளியீடு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், ரிதுவர்மா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் மோதல்!

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை துவங்கும் ஆட்டத்தில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சண்டே ஸ்பெஷல்: பலன் தராத வெயிட்லாஸ்… தீர்வு என்ன?

இலங்கைக்கு சொகுசுக் கப்பல் சுற்றுலா… திமுக மா.செ.வின் வேற லெவல் ட்ரீட்!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share