டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

களைகட்டும் தீபாவளி பண்டிகை!

நாடு முழுவதும் இன்று (நவம்பர் 12) காலை முதல் தீபாவளி பண்டிகை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

பிரதமர் மோடி – தீபாவளி வாழ்த்து!

தீபாவளி திருநாளை முன்னிட்டு “இந்த சிறப்புப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!” என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடைசி லீக் போட்டியில் இந்தியா!

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன.

ADVERTISEMENT

கனமழைக்கு வாய்ப்பில்லை!

தீபாவளியான இன்று தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 540வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து!

தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளும், விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நிமோனியா தினம்!

உலக அளவில் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இன்று நிமோனியா தினம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேரத்தை மீறினால் வழக்குப்பதிவு!

தீபாவளி பண்டிகையான இன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடுமையான சட்டநடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஷாவில் பழங்குடி மக்களுடன் தீபாவளி!

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆதியோகி முன்பு ஒன்றாக இணைந்து இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

லால் சலாம் டீசர் வெளியீடு!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளா லால் சலாம் படத்தின் டீஸர் இன்று காலை காலை 10:45 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாமா?

தீபாவளி ஸ்பெஷல்: இந்த நாளில் என்னவெல்லாம் சாப்பிடலாம்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share