நிர்மலாதேவி மனு விசாரணை!
பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (மே 8) விசாரணைக்கு வருகிறது.
சவுக்கு சங்கர் இன்று ஆஜர்!
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சவுக்கு சங்கர் ஆஜராக உள்ளார்.
விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பட்டியலின மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜோலார்பேட்டை சிறப்பு மின்சார ரெயில் ரத்து!
காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் சிறப்பு மின்சார ரெயில்(வண்டி எண். 06417) இன்று மற்றும் 10-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
14 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
உலக கருப்பை புற்றுநோய் தினம்!
கருப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ‘உலக கருப்பை புற்றுநோய் தினம்’ மே 8-ஆம் தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது.
கல்லூரிக் கனவு!
12 வகுப்பு முடித்து கல்லூரி பயிலவுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற நிகழ்வு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
ஹைதராபாத் – லக்னோ அணிகள் மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 57 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை – ராஜஸ்தான் போட்டி டிக்கெட் விற்பனை!
சேப்பாக்கத்தில் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள சென்னை – ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தக் லைஃப் பட அப்டேட்!
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தின் அப்டேட் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 53வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 ஆகவும், டீசல் ரூ.92.34 ஆகவும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா?