டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

முதல்வர் சென்னை திரும்புகிறார்!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) சென்னை திரும்புகிறார்.

ADVERTISEMENT

அமைச்சர் பொன்முடி ஆலோசனை

மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ADVERTISEMENT

நேபாள் பிரதமர் இந்தியா வருகை

நேபாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா 4 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார்.

ADVERTISEMENT

இன்று உள்ளூர் விடுமுறை

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவை ஒட்டி அம்மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மேயர்

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் இன்று மண்டலம்-6க்கு உட்பட்ட பொது மக்களிடமிருந்து மேயர் பிரியா  நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்.

பிளஸ் 2 மறுமதிப்பீடு விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை இன்று தொடங்கி ஜூன் 3 மாலை 5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் ஓய்வு

கேரளாவில் சுமார் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு பெறுவதையொட்டி அவர்களின்  பணப்பலன்களை ரூ.1500 கோடி அளவுக்கு வழங்க வேண்டும் என்ற நெருக்கடியில் கேரள அரசு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 375வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கூகுள் உத்தரவு

லோன் வழங்கும் செயலிகளை ப்ளே ஸ்டோரில் வைத்திருக்க விரும்பினால் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை மே 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான கருப்பொருள் “எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல”  என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞரின் அரசாணைக்கு உயிர் கொடுங்கள்: முதல்வருக்கு  மருத்துவர்கள் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் தொழிற்சாலையை அமைக்கும் ஓம்ரான்

மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்!

மேட்டூர் அணை திறப்பு: தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்துங்கள் – ராமதாஸ்

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share