டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு கடைசி நாள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (மே 3) கடைசி நாளாகும்.

சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வந்த முதல்வர் ஸ்டாலின், திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே இன்று சென்னை திரும்புகிறார்.

காரைக்கால் ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்!

காஷ்மீரில் உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரேம்குமாரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மணீஷ் சிசோடியா ஜாமின் மனு மீது தீர்ப்பு!

மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

இன்றும் 111 டிகிரி வெயில்!

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் சில இடங்களில் 111 டிகிரி, இதர மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 106 டிகிரி, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கக்கூடும்.

திருவண்ணாமலை – சென்னை ரயில் இயக்கம்!

திருவண்ணாமலை – சென்னை இடையே இன்று முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்!

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

மும்பை-கொல்கத்தா அணிகள் மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

அரண்மனை4, குரங்கு பெடல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள `குரங்கு பெடல்’, தமன்னா, ராஷி கண்ணா சுந்தர்சி நடித்த அரண்மனை4 திரைப்படம் இன்று வெளியாகிறது.

சுஜாதா பிறந்தநாள்!

சினிமாவிலும், இலக்கியத்திலும் முத்திரை பதித்த எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள் இன்று.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : வெஜ் பிரியாணி

டிஜிட்டல் திண்ணை: கண்டுகொள்ளாத அண்ணாமலை… நயினாரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்தா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share