டாப் 10 செய்திகள் : கெஜ்ரிவால் ரோடு ஷோ முதல்… சூரிய காந்த புயல் எச்சரிக்கை வரை!

Published On:

| By christopher

கெஜ்ரிவால் வாகன பேரணி!

சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் இன்று (மே 11) நடைபெறும் வாகன பேரணியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்னுடன் கலந்து கொள்கிறார்.

தேர்தலுக்கான பரப்புரை முடிவடைகிறது!

நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைகிறது.

துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத் தேர்வை எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆறு மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேர்வு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேர்வு முகாமானது இன்று நடைபெறுகிறது.

சூரிய காந்த புயல் தாக்கும்!

கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை இன்று இரவில் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க கடல் வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘எலக்சன்’ டிரெய்லர் ரிலீஸ்!

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா – மும்பை மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.

டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் தொடக்கம்!

தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் சீஸன் 3 போட்டிகள் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அம்பா ஸ்கை ஓன் மாலில் இன்று தொடங்குகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 56வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : காளான் லசானியா

அவகாசம் கேட்கும் எஸ்.பி…. சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா நெல்லை கொலை வழக்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share