டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news today tamil May 1 2024

உழைப்பாளர் தினம்!

உலகம் முழுவதும் இன்று (மே 1) உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

அயோத்தி செல்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அயோத்தி ராமர் கோயில் சென்று பால ராமரை தரிசனம் செய்ய உள்ளார்.

வெப்ப அலை வீசக்கூடும்!

இன்று முதல் 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் விடுமுறை!

உழைப்பாளர் தினமான இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ, மின்சார ரயில் இயக்கம்!

அரசு விடுமுறை தினமான மே தினத்தில் சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படியும், மின்சார புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியும் இயக்கப்படுகின்றன.

அஜித் பிறந்தநாள்!

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்களை இன்று முதல் 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வதை கட்டுப்படுத்த இன்று முதல் வாகன நிறுத்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை – பஞ்சாப் அணிகள் மோதல்!

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

புஷ்பா 2 முதல் சிங்கிள் ரிலீஸ்!

‘புஷ்பா-2’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ பாடல் இன்று (மே 1) மாலை 5:04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : தஹி பிரெட் டிக்கி

மோடி சுட்ட வடையை விட டிமாண்டா? – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share