வேளாண் பட்ஜெட் தாக்கல்! top 10 news today Tamil February 20 2024
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 20) தாக்கல் செய்கிறார்.
ஜம்முவில் பிரதமர் மோடி
ஜம்முவிற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, நாட்டுக்கு அவற்றை அர்ப்பணிக்க உள்ளார்.
டெல்லி நோக்கி இன்று பேரணி!
4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் டெல்லி நோக்கி இன்று பேரணி நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
காரைக்காலில் விடுமுறை!
காரைக்காலில் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவிற்காக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஓடிடி பிரச்சனை முடிவுக்கு வருமா?
திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
’வாட்டர் பெல்’ முறை அறிமுகம்!
அதிகரித்து வரும் வெயிலை முன்னிட்டு குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் ‘வாட்டர் பெல்’ முறை தொடங்கப்பட உள்ளது.
நடிகர் கலையரசனின் பிறந்த நாள்!
மெட்ராஸ் முதல் சேரன்ஸ் ஜர்னி வரை தன் நடிப்பால் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் நடிகர் கலையரசனின் பிறந்த நாள் இன்று.
வறண்ட வானிலை!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்!
10-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 640வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ் : முடி உதிர்வைத் தடுக்க சில எளிய மருத்துவக் குறிப்புகள்!
கிச்சன் கீர்த்தனா: நெய்ச் சோறு
top 10 news today Tamil February 20 2024