கோவை வாக்காளர்கள் பெயர் நீக்க வழக்கு!
கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 30) விசாரிக்க உள்ளது.
நிர்மலா தேவியின் தண்டனை விவரங்கள்!
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில், அவர் குற்றவாளி என ஸ்ரீவில்லிபுதூர் மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில், தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
கோடநாடு வழக்கு – 4 பேருக்கு சம்மன்!
கோடநாடு வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக ரமேஷ், தேவன், ரவிக்குமார், அப்துல் காதர் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அளித்துள்ளது.
மிக கடுமையான வெப்ப அலை!
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் மிக கடுமையான வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மணிப்பூரில் மறுவாக்குப் பதிவு!
மணிப்பூரில் மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்ட 6 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
ம.ஜ.த கட்சியின் செயற்குழு கூடுகிறது!
பெங்களூரு கர்நாடகாவில் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை ‘சஸ்பெண்ட்’ செய்வது தொடர்பாக ம.ஜ.த கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது.
SET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!
வரும் ஜூன் 3ஆம் தேதி கணினி வழியாக நடைபெறும் உதவி பேராசிரியர் பணிக்கான SET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்!
வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை செயல்படாமல் விடுமுறை தினமாக தான் இருக்கும் நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 46வது நாளாக, விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லக்னோ – மும்பை அணிகள் மோதல்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…