வெப்ப அலை வீசும்!
தமிழகத்தில் கடலோரம் அல்லாத வடக்கு உள்மாவட்டங்களில் இன்று(ஏப்ரல் 29) முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மறு வாக்குப்பதிவு!
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளிலும், கர்நாடகாவில் ஒரு வாக்குச்சாவடியிலும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நிர்மலா தேவி வழக்கில் இறுதித் தீர்ப்பு!
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்குகிறது.
ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு!
பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனுவை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.
கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் செல்லும் நிலையில், இன்று முதல் மே 4-ந் தேதி வரை அப்பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி ரோப் கார் சேவை நிறுத்தம்!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனியில் இன்று ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.
பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து!
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்த அந்த கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பிறந்த தினம்!
‘தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று!
கொல்கத்தா – டெல்லி மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 45வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசாட்சியும், தேர்தலும்: விரைந்து சிதையும் மக்களாட்சி விழுமியங்கள்