மகளிர் உரிமைத் தொகை வைப்பு தொடக்கம்! top 10 news 10 November
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் 1.13 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் இன்று (நவம்பர் 10) சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.1,000 வழங்குகிறார்.
திருப்பதி தரிசன டிக்கெட்:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைகை அணை திறப்பு!
வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 33-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை அணையில் இருந்து பெரியார் பாசன பகுதிக்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்!
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
தேசிய சட்டப் பல்கலைக் கழகம் – கடைசி நாள்!
2024ஆம் ஆண்டு தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் இணைவதற்கான CLAT நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
தென் ஆப்பரிக்கா – ஆப்கானிஸ்தான் மோதல்!
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு மோதுகின்றன.
12 மாவட்டங்களில் மழை!
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்கு திரைப்படங்கள் ரிலீஸ்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவின் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, விக்ரம் பிரபுவின் ’ரெய்டு’ மற்றும் The Marvels என்ற ஹாலிவுட் படமும் இன்று ரிலீசாகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 537ஆவது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. top 10 news 10 November
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…