கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு!
சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை இன்று (அக்டோபர் 7) மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
பள்ளிகள் திறப்பு!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
விமான சாகசம் – முழு ஒத்துழைப்பு!
மெரினாவில் நேற்று நடைபெற்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின் போது மக்களுக்காக அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி செய்யப்பட்டு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடரும் போர்!
இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி ஓராண்டு ஆகியும் இன்னும் நிறுத்தப்படாமல் தாக்குதல் நடைபெறுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெஃப்கனெக்ட் 4.0. நிகழ்வு
பாதுகாப்புத் துறை தளவாடத் தயாரிப்பில் நாடு சுயச்சார்பை அடையவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் இன்று டெஃப்கனெக்ட் 4.0. (DefConnect 2024) நிகழ்வு டெல்லியில் நடத்தப்படுகிறது. இதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
40 நாட்களுக்கு ரோப்கார் ரத்து!
பழனி கோயிலின் ரோப் காரில் இன்று முதல் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 40 நாட்களுக்கு ரோப்கார் இயங்காது. மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் படிப்பாதை வழியாக செல்லுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் – இங்கிலாந்து மோதல்!
பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் இந்திய நேரப்படி காலை 10.30க்கு தொடங்குகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 204-வது நாளாக இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குரூப் 2 தேர்வு பயிற்சி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்படவுள்ளது. அந்தவகையில் இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
கனமழைக்கு வாய்ப்பு!
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன?
கிச்சன் கீர்த்தனா: ராகி அப்பம்!