நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகப்பட்டிணத்தில் இன்று (மார்ச் 3) நடக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். top 10 news today march 3
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்! top 10 news today march 3
தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. முறைகேடுகளை தடுக்க 4,470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதிதோறும் பொதுக்கூட்டம்!
திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என துணை முதல்வரும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் சீமான் வழக்கு!
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
வெப்பநிலை அதிகரிக்கும்!
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அறிமுகம்!
புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ரூ.11.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
புதிய ரயில் சேவை!
சென்னையில் புறநகர் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் சென்னை சென்ட்ரல் – ஆவடி – கும்மிடிப்பூண்டி இடையே புதிதாக 4 ரயில் சேவை தொடங்க பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாசித் திருவிழா ஆரம்பம்!
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
உ.பி. வாரியர்ஸ் – குஜராத் மோதல்!
மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்கர் விருது விழா!
புகழ்பெற்ற 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்க உள்ளார்.